இருசக்கர வாகனம் மூலம் இலவச ஆக்ஸிஜன் சிலிண்டர் வினியோக திட்டத்தை,மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் துவக்கி வைத்தார்.!!

 

-MMH 

     கோவை கீரப்பாளையம் பகுதியில் உள்ள வேதாந்தா அகாடமி கல்லூரியில் சோனு சூட் பவுண்டேசன் அறக்கட்டளை சார்பாக நோய் தொற்று தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை இலவசமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொடுக்கும் திட்டத்தை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் துவக்கி வைத்தார் குறிப்பாக இந்த அறக்கட்டளை கர்நாடக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக இருசக்கர வாகனத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொடுத்து உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இருசக்கர வாகனத்தில் இலவச ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வினியோகம் செய்யும் திட்டத்தை துவக்கி வைத்த மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் செய்தியாளர்களிடம் பேசும்போது:

ஆக்சிஜன் சிலிண்டர் தேவை தமிழ் நாட்டில் அதிகரித்து உள்ளது தற்போது இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக இருசக்கர வாகனம் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அவர்களுடைய இடத்திற்கே சென்று கொடுக்கும் பணியை இந்த அறக்கட்டளை செய்து வருகிறது. தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் இருசக்கர வாகனங்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர் இலவசமாக கொடுக்கும் பணியை இன்று தொடங்கி வைத்துள்ளோம்.

மேலும் இதை படிப்படியாக அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் தமிழக கேரள எல்லைப் பகுதியான வாலையார்  பகுதியில் நேற்று ஆய்வு நடத்தினோம் அப்பொழுது இ பாஸ் இல்லாமல் பொதுமக்கள் யாரும் கோவை மாவட்டத்திற்கு அனுமதிக்கப்படவில்லை சரக்கு வாகனங்கள் மட்டும் தான் தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது என்றார் மேலும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

- சீனி,போத்தனூர்.

Comments