ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவி வழங்கிய தாய்மை அறக்கட்டளை !! பொதுமக்கள், அமைப்பினர் பாராட்டு !!

 

-MMH

    தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்றார். அவர் கொரோனா தொற்று அழிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

தனியார் அமைப்பினர் மற்றும் சமூக சேவகர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அதன்படி, கோவை தாய்மை அறக்கட்டளை மற்றும் 50 ஹேண்ட்ஸ் (கனடா), ஆகியன இணைந்து  கொங்கு நாடு ஆர்ட்ஸ் கல்லூரியில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்திற்கு  பொது மக்கள் பயன்பாட்டிற்கு 7 லிட்டர் ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவி ஒப்படைக்கப் பட்டது. 

இந்த நிகழ்வின்போது தாய்மை அறக்கட்டளை கோவை சதீஸ், சாரதா, சந்திரசேகர், மயில்சாமி, மருத்துவர் யோகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையடுத்து தாய்மை அறக்கட்டளையினர் பணியை பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-செய்தியாளர் ஆர்.கே.பூபதி.

Comments