பசித்தவர்க்கு உணவளிக்கும் இஸ்லாமிய அமைப்புகள் குவியும் பாராட்டு..!!

 

-MMH

      கொரோனா என்னும் கொடிய நோய் தோற்று  உலகையே வாட்டி வதைத்து பல உயிர்களை பலி வாங்கிய நிலையில் நம் நாடான இந்தியாவையும் விட்டு வைக்காமல் பதற வைத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் ஒருநாள் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டு வருகின்றன இச்சூழலில் பசியால் வாடிக்கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களை காணமுடிகிறது இத்தகைய இறுக்கமான சூழலிலும் சமூகத்தின் தேவைகளை பல நல் உள்ளங்கள் நிறைவேற்றி வருகின்றன.

அதிலும் கோவை மாவட்டத்தில் சமூகப்பணிகளை அடிப்படையாக கொண்ட "வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்" என்ற இஸ்லாமிய இயக்கத்தின் கீழ் இயங்ககூடிய "அல்பய்யினா சோஷியல் வெல்ஃபேர் டிரஸ்ட்டும்" குறிப்பிட்ட பங்கை வகித்துக்கொண்டிருக்கிறது!!

இது போன்ற பேரிடர் காலட்டத்தில் உணவின்றி  வறுமையில் வாடக்கூடிய பொதுமக்களுக்காக தினந்தோறும் உணவளிக்கும் பணியை செய்து வருகிறது இந்த சேவைக்குழு!! குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 200 முதல் 300 நபர்களுக்கு தங்களுடைய முயற்சியால் உணவு தயாரித்து கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ எஸ் ஐ மருத்துவமனைகளில் உணவுக்காக சிரமப்படுபவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள் இந்த சேவைக்குழுவினர்.

அதுமட்டுமின்றிஅரசு பொது முடக்கம் அறிவித்த இந்த சூழ்நிலையில்  தங்களுக்கான வேலைகளை இழந்து வாழ்வாதாரமின்றி வீடுகளில் முடங்கி கிடக்கும் ஏழ்மையான குடும்பங்களுக்கும் அவர்களின் தேவைகள் அறிந்து உதவி செய்தும் வருகிறார்கள்.

இந்த சேவைக்குழுவில் உள்ள ரிஜ்வான், ஜாஃபர்,தௌஃபீக்,உமர் போன்ற சகோதரர்கள் இப்பணிகளுக்காக முழுவீச்சில் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்இந்த நல் உள்ளங்களை போல் மற்றவர்களும் முன்வந்து இதுபோன்ற மக்களுக்கு நற்பணிகளை உதவ வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கூறுவதோடு இவர்களைப் பாராட்டி வருகிறார்கள்

இந்த வெல்ஃபேர் டிரஸ்ட்டின் பொறுப்பாளர்களாக ரியாஸுத்தீன் மற்றும் நிஜாமுத்தீன் இருந்து வருகிறார்கள். இது போன்ற பணிகள்  மட்டுமல்லாமல் மாதம்தோறும் பல ஏழை குடும்பங்களின் தேவைகளுக்காகவும் உழைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக:-

விதவைகள்,

கணவனால் கைவிப்பட்டவர்கள்,

முதியோர்கள்,

நோயாளிகள்,

மாணவர்கள்,

என தேவையுடைய மக்கள் யார் என்பதை அறிந்து உதவி வருகிறார்கள்.!கிட்டத்தட்ட 5 வருடங்களாக தங்களுடைய சமூக சேவையின் மூலமாக சமூகத்தில் உள்ள ஏழைகளுக்காக "அல்பய்யினா சோஷியல் வெல்ஃபேர் டிரஸ்ட்"  பயணித்து கொண்டிருக்கிறது என்பது பொதுமக்களிடையே வரவேற்பையும் பாராட்டுகளையும் ஏற்படுத்தி வருகிறது.

நாளை வரலாறு செய்திகளுக்காக 

-ஈஷா. அனஸ். பிலால்.

Comments

riyas said…
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சகோதரர்களா!!