வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்கம் சார்பாக, நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது!!
கோவை வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்கம் சார்பாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நலன் கருதி பத்து நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும், சமூக விலகல் விழிப்புணர்வை எஸ்டேட் மக்களுக்கு ஏற்படுத்த கோரியும், நோய் தொற்றுள்ள பகுதிகளில் கிருமிநாசினிகளை தெளித்தல்,தனிமைப்படுத்துதல் ஆகியவைகளை வலியுறுத்தியும் நகராட்சி ஆணையாளர், வட்டாச்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகிய அதிகாரிகளிடம் இதுதொடர்பான மனு அளிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர் மேலும் வட்டாச்சியர் இந்த மனுவை உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பி ஆவன செய்து எஸ்டேட் பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார். இந்நிகழ்வின் போது, பிரேம் முனவர்your choice, ஆண்ட்ரூஸ்vip, செய்யதலி parkavenue ஆகிய நிர்வாகிகள் இந்த மனுவை அளித்தனர்.
-திவ்ய குமார் வால்பாறை. செந்தில் குமார்.
Comments