கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்!!

 

-MMH

   முன்னதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி, சேகர்பாபு, உதயிநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். கருணாநிதியின் பிறந்தநாள் திமுக தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின் தமிழக மக்களுக்காக மேலும் 5 புதிய திட்டத்தை இன்று துவங்கி வைத்தார். அவை பின்வருமாறு. 

1. அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, கோயில் பணியாளர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இன்று தொடக்கம். 

 மேலும் 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்களும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு வழங்கப்படுகிறது. 

2. ரேஷனில் கொரோனா நிவாரணத்தின் 2-வது தகணையாக ரூ.2000 வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். 

3. தமிழகத்தில் கொரோனா நிவாரண உதவியாக 14 மளிகைப் பொருட்களை ரேஷனில் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். 

4.   நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர், மருத்துவ பணியாளர்களின்  குடும்பத்தினருக்கு  ரூ.25  லட்சம்  இழப்பீடு வழங்குகிறார்.

 5.  கொரோனா காலத்தில் பணியில் இருந்து கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்த  காவலர்கள் குடும்பங்களுக்கு         ரூ.25 லட்சமும் வழங்கும் திட்டத்தைத்யும் இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-குமார் நிருபர் ஊத்துக்குளி.

Comments