நுரையீரலில் தேங்கிய சளியை இயற்கை முறையில் எடுப்பது எப்படி..?

-MMH 

      அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது. சில பாக்டீரியா அல்லது வைரஸை சுவாசிக்கும்போது, அது நுரையீரலில் உள்ள சளியால் சிக்கிக்கொள்ளும். இதனால் நம் உடலுக்குள் செல்வதைத் தடுக்கிறது. இந்த சளியானது பின்னர் தும்மல், இருமல் அல்லது மூக்கு ஒழுகுதல் மூலம் வெளியேறுகிறது. உங்கள் நுரையீரலில் அதிகப்படியான சளி கட்டப்பட்டிருக்கும் போது இந்த பிரச்சினை வருகிறது. எனவே சளி கட்டிக்கொண்டு நுரையீரலை பாதிக்கும் முன் கெட்ட சளி வெளியேறி நுரையீரலை பாதுக்காக இந்த வழிகளை பின்பற்றுங்கள்.

வெந்தயம் : 

ஒரு ஸ்பூன் வெந்தையம் எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒருகிளாஸ் தண்ணீரில் 4-5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். ஒருநாளைக்கு ஒரு கிளாஸ் குடியுங்கள். கிருமிகளால் அடைபட்டிருக்கும் சளி கரைந்து வெளியேற உதவும்.

மூச்சுப் பயிற்சி : 

நன்கு இழுத்து மூச்சு விடுதல் பயிற்சி அல்லது உடற்பயிற்சி எதுவானாலும் நன்கு மூச்சை இழுத்து விடும்போது நுரையீரல் சளி கரைந்து வெளியேற வாய்ப்பு உள்ளது.

உப்பு தண்ணீர் : 

தண்ணீரில் உப்பு கலந்து கொதிக்கவிடுங்கள். வெதுவெதுப்பாக இருக்கும்போது வாயில் ஊற்றி கொப்பளிக்க சளி குறைந்து நுரையீரல் ஆரோக்கிய வாய்ப்பு உள்ளது.

ஆவி பிடித்தல் : 

நன்கு கொதிந்த நீரை ஆவி பிடிக்கும்போது, மூச்சை நன்கு இழுத்துவிடும் போது கூடுதல் சளி, கிருமி நிறைந்த சளிக்கட்டிகள் கரைந்து வெளியேறிவிடும். நுரையீரலும் ஆரோக்கியமாக இருக்கும்.முயற்சி செய்து பாருங்கள்.

'இதன் தொடர்ச்சியை தெரிந்து கொள்ள விரும்பினால் வாசகர்கள் செய்தியின் கமன்ட் பாக்சில் பதிவு செய்யலாம்'.   

-நம்ம ஒற்றன்.



Comments