வால்பாறையில் சோகம் யானை மிதித்து முதியவர் பலி..!!

 

-MMH

    கோவை மாவட்டம் வால்பாறையில் மீண்டும் யானைகள் அட்டகாசம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இன்று காலை வாட்டர் பாஃல்ஸ் எஸ்டேட் பகுதியில் கூலித்தொழிலாளி ஒருவரை  யானை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. தகவல் அறிந்தவுடன் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

இதை அறிந்த நமது நகரக் கழக பொறுப்பாளர் திரு பால்பாண்டி வழக்கறிஞர் நேரில் சென்று ஆறுதல் கூறி அது மட்டுமல்லாமல் அந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி கொடுத்து வருகின்றனர். மேலும் இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க வனத்துறையினருக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

அதிகாலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றதால் அந்தப் பகுதி முழுவதும் அதிர்ச்சியும் சோகமும் காணப்பட்டது.

நாளை வரலாறு செய்திகளுக்காக 

-செந்தில் திவ்யா குமார். ஈசா.

Comments