கொரோனா நோயாளிகள் வீடு தேடி இலவச உணவு வழங்கும் தாய்மை அறக்கட்டளை !! ஆனந்தக் கண்ணீருடன் கைதொழும் மக்கள் !!

 

-MMH

     கொரோனா நோய் பெருந்தொற்று காலத்திலும் தன் உயிரை துச்சமாக மதித்து கோவையில்  சேவையாற்றும் தாய்மை அறக்கட்டளையினர் பணி நெஞ்சம் நெகிழ வைத்துள்ளது.

எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு வீட்டிலேயே தனிமை படுத்தி கொண்டோம். மிகுந்த உடல் சோர்வோடு உள்ளதால் உணவு வழங்கி உதவ முடியுமா?" என தினமும் 2 போன் அழைப்புகளாவது தாய்மை அறக்கட்டளையினருக்கு வந்து விடுகிறது.

தாய்மை அறக்கட்டளை களத்தில் இறங்கி 2021 மே மாதம் 12 ம்தேதி முதல் 24 நாட்களாக ஏற்க்குறைய 100 நோயாளிகளுக்கு அவர்களின் இல்லம் தேடி சென்று இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. கவனமாய் அவர்களின் விருப்பத்தின் படி வீட்டின் கேட் மீதும், சுவர் மீதும், தடுப்பு குச்சிகள் மீதும், பால் இடும் பைகள் உள்ளேயும் வைத்து விட்டு வருகின்றனர், தாய்மை அறக்கட்டளை சேவை உள்ளங்கள் !

                        வீட்டு கேட்டில் தாய்மை அறக்கட்டளையினர்  வைத்துள்ள உணவு பேக்

ஒவ்வொரு உணவும் வைத்த பின் கைகளை சானிடைசர் செய்து பிறகு அடுத்தவருக்கு தருகின்றனர். உணவு நோயாளிகள் உண்ணும் வகையில் இலகுவாகவும், சுவையாகவும் செய்ய சொல்லி தரமாக குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறது. கோவையில் இருகூர், ஒண்டிபுதூர், நெசவாளர் காலனி, Sihs காலனி, நீலி கோணம்பாளையம், சிங்காநல்லூர், இ.எஸ்.ஐ வரை உணவு கேட்டு பதிவு செய்து கொண்டவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

விரைவில் குணமடைய உணவோடு கோவை மாவட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கம் வழங்கிய நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்துகளையும் அவர்களுக்கு வழங்கி வருகிறது தாய்மை அறக்கட்டளை. உணவு பெறுபவர்களின் புகைப்படங்கள் எடுப்பதை நல்லெண்ண நோக்கத்தில் தவிர்த்து வருவதாகவும் கோவை நீலிக்கோணாம்பாளையம் 5 கி.மீட்டர் சுற்றளவில் மட்டும் காலை உணவு இலவசமாக பெற.. 9159158155,    9442531460, 9698485937, 8531077048 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தாய்மை அறக்கட்டளையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

-செய்தியாளர் ஆர்.கே.பூபதி.

Comments