சிறுத்தை புலி நடமாட்டத்தால் காமராஜர் நகர் பகுதி மக்கள் அச்சம்..!

-MMH

      கோவை மாவட்டம். வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக காமராஜ் நகரில் உலாவரும் சிறுத்தைப்புலி அச்சத்தில் மக்கள், இங்கு நாய் கோழி ஆடுகள் ஆகியவை வளர்ப்பு பிராணியாக வளர்த்து வருகின்றனர். ஆனால் இரவு நேரங்களில் சிறுத்தை புலிகள் வீட்டின் கூரை மேல் அமர்ந்து கொண்டு வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வருவதாக  காமராஜ் நகர் பகுதி பெரும் அச்சத்திலும் பீதியிலும் இருக்கின்றனர்.

இதனை கவனத்தில் கொண்டு வனத்துறையினர் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றி தெரியும் சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடித்து காட்டுக்குள் விட வேண்டுமென்றும் அப்போதுதான் மக்களின் அச்சம் விலகுவதாக அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளை வரலாறு செய்திகளுக்காக 

-செந்தில் சிவகுமார். ஈசா.

Comments