ஆதரவில்லாமல் இறக்கும் உடல்களை.! வாங்கி நல்லடக்கம் செய்யும் நேசக்கரம் அமைப்பினர் குவியும் பாராட்டு..!!

 

-MMH

     திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இயங்கி வருகிறது நேசக்கரம் எனும் சமூக சேவை அமைப்பு. மன்னார்குடி மேலப் பாலம் பகுதியில் ஆதரவும், பராமரிப்புமின்றி உடல் நலிவுற்ற நிலையில் சாலையோரம் இருந்த மூதாட்டி ஒருவரை நேசக்கரம் அமைப்பினர் மீட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

9 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நேசக்கரம் அமைப்பு அரசு அனுமதியோடு இதற்காகவே பராமரித்து வரும் "அமைதி வனம்" எனும் அடக்க ஸ்தலத்தில் அவரது உடல் தக்க மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இது போன்ற சமூக அக்கறையுடன் இளைஞர்கள் செயல்படுவது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திருமலைக்குமார். ரைட் ரபிக்.

Comments

மனித நேயத்தின் உச்சம்...வணங்குகிறேன்.