என்றும் நினைவில் எஸ்.பி.பி அவர்கள் ! டி.எஸ்.ஆர்.சுபாஷ் நெகிழ்ச்சி !!

 

-MMH

   " நீங்கள் பாடிய ஆயிரம் நிலவே வா " என்ற பாடலை நான் சிறு வயதில் 500, 500  நிலவாக கேட்டு ரசிப்பேன் என்று ஒரு முறை எஸ்.பி.பி அவர்களிடம் சொன்னேன் ! இதைக் கேட்ட அவர் புரியாமல் என்னை உற்றுப் பார்த்தார் !மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களால் திரை இசை திலகம்  கே.வி.மகாதேவன் அவர்களின் மூலம் அடிமைப்பெண் படத்தில் பாடும் வாய்ப்பு அளித்தார் !

பி.சுசீலா அவர்களுடன் இணைந்து எஸ்.பி.பி பாடிய பாடல் "ஆயிரம் நிலவே வா " என்ற பாடல் ! இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா, சந்திரபாபு, அசோகன் உட்பட பலர் நடிப்பில் 1969 ல் வெளியானது !இதில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் மிகவும் பிரபலமானது ! இந்த பாடல் நீளம் ஏறக்குறைய ஐந்து நிமிடங்கள் ஆகும் !

இந்த பாடல் ரெக்கார்டில் ஒலிக்கும் போது ஒரு சரணம், பல்லவி ..... அப்படியே வந்து பாதியில் நின்று விடும் ! அதன் பிறகு அதை திருப்பி போடும் போது மீதி பாதி பாடல் ஒலிக்கும் ! இதை நான் அவரிடம் சொன்னேன் ! சிறு வயதில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை 500 நிலவு + 500 நிலவாக கேட்பேன் என்று சொன்னேன் !

அவர் அதை கேட்டு ரசித்த சிரிப்பு இன்னும் என் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கின்றது ! லட்சுமண் ஸ்ருதி ராமன் அவர்கள் மறைந்த போது, அவருடைய படத்திறப்பில் எஸ்.பி.பி அவர்களுடன் நானும் கலந்து கொண்டேன் ! அன்று அவர் பேசிய பேச்சு அனைவரையும் கண் கலங்க வைத்தது !

அவர் பேசி முடித்த பிறகு அவரிடம் அலைபேசியில் நான் தொடர்பு கொண்டு "உங்கள் மனது உங்களுடைய குரலைவிட மிருதுவானது " என்று சொன்னேன் !நான் அவருடன் கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி அதுவே. என்றும் நினைவில் உள்ளது என திரைப்பட எடிட்டர், எழுத்தாளர் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

-தொகுப்பு : ஊடகவியலாளன் ஆர்.கே.பூபதி.

Comments