உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் மரக்கன்றுகளை நட்டிய அதிகாரிகள்!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை தாலுகாவில்  வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு காவல்துறை அதிகாரி திரு முருகையா அவர்களுடன் இணைந்து வனத்துறை அதிகாரிகளும்  வால்பாறை ஸ்டேட் பாங்க் மேலாளர் மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும் சிறப்பாக மரக்கன்றுகளை நட வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி மரம் வளர்ப்போம்! மழை! பெறுவோம் என்ற சொல்லுக்கு இணங்க ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் சராசரி ஒரு மரமாவது நட வேண்டும் என்று கூறும் இந்த தருணத்தில், இதுபோன்ற மரம் நடும் நிகழ்ச்சிகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை வெகுவாக கவர்வதோடு அங்கு வசிக்கும் மக்களும் உறுதிமொழியை ஏற்று மகிழ்ந்தனர். 

நாளைய வரலாறு செய்திக்காக,

- திவ்யாகுமார், வால்பாறை. ஈசா.

Comments