தூங்கிக்கொண்டிருந்த போது பரிதாபம்.! வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் என்ஜினீயர் பலி..

-MMH

     தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம்  7 வது தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் நடராஜன். இவரது வீட்டில் வாடகைக்கு கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருபவர் தச்சு தொழிலாளியான ராஜமுருகன். இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களுடைய மகள் பரமேசுவரி  (22). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலைக்கு சென்று வந்தார். இவர்களுடைய மகன் சுந்தர்  (21).  ராஜமுருகன் வசித்து வரும் வீட்டின் மேற்கூரை உப்புறம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து உள்ளது. அதனை வீட்டின் உரிமையாளர் நடராஜன் கொத்தனார் மூலம் சரி செய்து உள்ளார்.

சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது;  நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜமுருகன் மற்றும் குடும்பத்தினர் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரையில் உள்புறமாக இருந்த சிமெண்டு பூச்சு பெயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த பரமேசுவரி, மற்றும் அவரது தம்பி சுந்தர் அகியோர் மீது விழுந்தது.

இதில் அவர்கள் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக 2 பேரையும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரமேசுவரி பரிதாபமாக  உயிர் இழந்தார். சுந்தர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அருகில் படுத்திருந்த ராஜமுருகனும், அவரது மனைவியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஜெயக்குமார், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், மற்றும் போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். 

தந்தை கண்ணீர்; மகளின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது ராஜமுருகன் கண்ணீர் மல்க கூறுகையில், "என் பிள்ளைகளின் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தேன். என்ஜினீயரிங் முடித்த எனது மகள் பரமேசுவரி கடந்த 6 மாத காலமாக தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தார். என் மகனும் படிப்பு முடித்து விட்டால், எங்கள் கஷ்டம் தீரும் என்று நினைத்தேன். ஆனால் எல்லாம் வீணாகிவிட்டது. என்று கதறி அழுதது காண்போர் நெஞ்சை கரைய வைத்தது.

நாளை வரலாறு செய்திகளுக்காக 

-வேல்முருகன் தூத்துக்குடி, ஈசா.

Comments