உலக சுற்றுச்சூழல் தினம்!! கிராம மக்களுக்கு MP. கனிமொழி அளித்த பரிசு!!

   -MMH

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் கஸ்பா கிராமத்துக்கு கடந்த 2020 ம் ஆண்டு கிராம சபை கூட்டத்துக்கு கனிமொழி எம் பி சென்றிருந்தபோது, அவரை சந்தித்த ஊர் மக்கள், "ஆத்தூர்ல பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் இருக்கிறது. இந்த குளத்தால் சுத்தியுள்ள 16 கிராமங்கள் குடிதண்ணீர் பெறுது. இந்த குளத்து தண்ணியால 2000 ஏக்கருக்கு மேல விவசாயம் நடந்திருக்கு, கடல்ல இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இந்த ஊர் உள்ளது. 

அதனால நிலத்தடிநீர் எல்லாம் உப்பாகுற அபாயத்தில் உள்ளது. இந்த குளத்தை ரொம்ப வருஷமா தூர் வாரவேயில்லை. அதனால இப்ப இந்த குளத்தின் ஆழம் குறைஞ்சு பல செடிகொடிகள் புதர்கள் மணடிக் கிடக்கு. இதையெல்லாம் அகற்றி குளத்தை தூர்வாரினால் இந்த சுத்து வட்டாரத்துல விவசாயம் செழிக்கும், நிலத்தடி நீரும் உப்பாகாம தடுக்கலாம். அதனால இந்த ஆத்தூர் கஸ்பா கிராம குளத்தை தூர்வாரி கொடுக்கனும்" என்ற கோரிக்கையை முன் வைத்தனர். 

இதையடுத்து ஆத்தூர் கஸ்பா குளத்தின் விவரங்களை பொதுப்பணித்துறை இடம் இருந்து பெற்ற கனிமொழி எம் பி  குளத்தை தூர்வாரும் பனிகளை தொடங்கினார். இந்த நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் நீராதாரங்களை பெருக்கும் தன்னார்வ அமைப்பு ஒன்று ஆத்தூர் கஸ்பா குளத்தை தூர்வாரி கொடுக்க முன் வந்ததுடன் இது தொடர்பான வழிகாட்டுதல்களை தருமாறு அந்த தன்னார்வ அமைப்பு மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தது இறுதியாக இப்போது ஒப்புதல் பெற்றுவிட்டதால் ஆத்தூர் கஸ்பா குளத்தை தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. 

இதற்கு ஆத்தூர் கஸ்பா கிராம மக்கள் "என்றோ நாங்கள் வைத்த கோரிக்கையை நினைவில் வைத்து நிறைவேற்றிக் கொடுத்த கனிமொழி எம் பி க்கு பாராட்டு பத்திரம் வழங்கி கெளரவ படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கையால் சுற்றியுள்ள 16 கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் நீங்கும் என கிராம மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-வேல்முருகன், தூத்துக்குடி . ஈசா.

Comments