சென்னையில் 9 இடங்களில் கடைகள் அடைப்பு மீண்டும் கொரோனா தெற்று அதிகரிப்பு!!

  -MMH

கொரோனா என்னும் கொடிய நோய் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் தமிழகத்தில் ஒன்றாம் அலை இரண்டாம் அலை என்று மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மூன்றாம் அலை வருவதாக கூறிவரும் நிலையில் சென்னையில், இன்று தற்காப்பு நடவடிக்கையாக மக்கள். அதிகமாக கூடும் இடமாக ஒன்பது இடங்களில், கடைகள் அடைக்கப்பட்டு வருகின்றன.

ஒன்று, புரசைவாக்கம் டவுன் சந்திப்பு முதல், பென்ஸ் சாலை சந்திப்பு வரை, ஜாம்பஜார் பாரதி சாலை, திருவல்லிக்கேணி ரத்னா கஃபே சந்திப்பு முதல், பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாகிப் தெரு, அபிபுல்லா தெரு, புலி போன் வணிக வளாகம், கொத்தவால் சாவடி சந்தை, ராயபுரம் சந்தை, அமைந்தகரை சந்தை, ஆகிய 9 இடங்களில், இன்று கடைகள் அடைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

புறநகர் பகுதியான தாம்பரம் பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் கூடும் பகுதியில் கடைகள் அடைக்க வலியுறுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.திருவல்லிக்கேணி சாலை வெறிச்சோடி காணப்படுவதால், அங்கு வசிக்கும் மக்கள் மீண்டும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். திருவல்லிக்கேணி, தங்க சாலையிலும் வருகின்ற ஒன்பதாம் தேதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-புதுப்பேட்டை நவாஸ், அப்துல்ரஹீம்.

Comments