மதுரம் ராஜ்குமார் எழுதிய நூல் கல்வி அமைச்சர் வெளியீடு!!

    -MMH

மதிப்புறு முனைவர், இளம்பாரதி, உலகச் சாதனையாளர், மாணவர் செ.மதுரம் ராஜ்குமார் எழுதிய "காலத்தை வென்ற கலாம்"  நூலினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு வாழ்த்தினார். 

நல்லோர் வட்டத்தின் 'எழுதுக' அமைப்பின் மூலம் நூறு புத்தகங்களை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் எழுதியிருந்தார்கள்.

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நினைவுநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்நிகழ்வில் சேலம் மாவட்டம், வாழப்பாடி-முத்தம் பட்டியைச் சேர்ந்த தற்போது மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் உலகச் சாதனையாளர், மதிப்புறு முனைவர், இளம்பாரதி, இளங்கம்பன் போன்ற பல விருதுகளைப் பெற்ற இளம் கவிஞர், எழுத்தாளர் செ.மதுரம் ராஜ்குமார்,  மறைந்தும் இளம் இந்தியாவாய் மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலாம் வாழ்க்கை பயணத்தை கவிதைகளாக வடித்திருந்தார்.

இந்நூல் 2021 ஜூலை 31 ம்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி  வெளியிட்டார். மேலும் மதுரம் ராஜ்குமார் எழுதி வெளியிட உள்ள தனது பத்து நூல்களை நேரில் தான் படிக்கும் பள்ளியிலேயே வெளியிட்டுத் தரும்படி அமைச்சரை கேட்டுக் கொண்டார். இவ்விழாவில் அறிவியல் அறிஞர் சிவதாணு பிள்ளை அவர்கள், கலாம் ஐயாவின் பேரன்  ஷேக் தாவூத் 'எழுதுக' அமைப்பினர் மற்றும் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் போன்ற பலரும் கலந்து கொண்டனர்.

- ஊடகவியலாளன், பத்திரிகையாளன்,

ஆர்.கே.பூபதி.

Comments