கூடலூரில் கனமழை! நிவாரண பணிகளில் களமிறங்கிய மஜகவினர்!

-MMH

   நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது கிராமங்களில் எல்லாம் சேர்ந்து அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு தொடர்ந்து மஜக வினர் நிவாரண உதவிகள் செய்து வருகிறார்கள்.

அதை தொடர்ந்து கூடலூர் புத்தூர் வயல் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்கள் கூடலூர் நகர கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் குமார், அவர்கள் முன்னிலையில்  வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜோசப், நிசார் பாபு, கூடலூர் நகர செயலாளர் ஜீவா, நகர பொருளாளர் அப்துல் மஜீத், நகர துணைச் செயலாளர்கள் விஜயன், ஹரி, மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஜாபர்&ஹனீப்.

Comments