நூறாவது நாள்! இந்த 100 நாளில் தான் எத்தனை எத்தனை சாதனைகள் நா.கார்த்திக் EXMLA அறிக்கை!

 

-MMH

          தமிழகத்தில் மாண்புமிகு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.கழக ஆட்சி அமைந்து இன்று 100வது நாள்! இந்த 100 நாளில் தான் எத்தனை எத்தனை சாதனைகள். கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எக்ஸ் எம் எல் ஏ அறிக்கை.

தமிழகத்தில் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.கழக ஆட்சி அமைந்து இன்று 100வது நாள் இந்த 100 நாளில் தான் எத்தனை எத்தனை சாதனைகள், ஒவ்வொரு வினாடியும் தமிழக மக்களுக்காக மாண்புமிகு முதல்வர் அவர்கள் சிந்தித்து செயல் படுத்திய திட்டங்கள் ஒரு வரலாற்று பெட்டகம்! மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திட்டங்கள் தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு வாழ்வில் ஒளி ஏற்றிய திட்டங்கள் முதல்வராகப் பொறுப்பேற்றதும் முத்தான ஐந்து அறிவிப்புகளை அறிவித்தார்:

1.4000 ரூபாய் கொரோனா கால நிவாரண நிதி வழங்கப்பட்டது!

2ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது!

3.மகளிருக்கு விலையில்லா பேருந்து பயண திட்டம் நிறைவேற்றப்பட்டது!

4.தனியார் மருத்துவமனையிலும் கொரோனாவிற்கு இலவச சிகிச்சை திட்டம் நடைமுறைக்கு வந்தது!

5.உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்திற்கு தனி துறை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் நிறுவப்பட்டது!

6.கொரோனா பரவலை தடுக்க மாவட்டம் தோறும் வார் ரூம் நிறுவி ஒருங்கிணைந்த செயல்பாடு!

7.பத்திரிக்கை ஊடகவியலாளர்கள் – தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு!

8.கொரோனாவிற்கு பலியான மருத்துவ துறையினர் குடும்பங்களுக்கு 25 லட்சம் உதவி தொகை!

9.அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14 வகையான மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது!

10.செவிலியர்கள் /தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை!

11.மேட்டூர் அணை குறித்த தேதியில் திறக்கப்பட்டது!

12.தென் சென்னையில் உயர்சிறப்பு மருத்துவமனை திட்டம்!

13.மதுரையில் கலைஞர் நூலகம் அறிவிப்பு!

14.இலக்கிய மாமணி விருது அறிவுப்பு!

15.தமிழ் எழுத்தாளர்களுக்கு அரசு வீடு

16.திருவாரூர் மாவட்டத்தில் உணவுதானிய சேமிப்புக்கிடங்குகள்

17.மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகளுக்கும் அரசு பேருந்தில் இலவசப் பயண திட்டம்!

18.இயல் இசை நாடக துறை கலைஞர்களுக்கு மாத ஓய்வூதிய திட்டம்!

19.முகாம்களுக்கு வெளியே வசிக்கும் 13,000இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு 4000 நிவாரண நிதி!

20.தமிழ் அறிஞர்கள் அய்யா கி.ரா, அய்யா.இளங்குமரனார் அவர்களின் மறைவுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

21.தகைசால் தமிழர் அரசு விருது தொடக்கம்!

22. விருது பெற்ற தகைசால் தமிழர் மறைவுக்கு அரசு மரியாதை வழங்கப்படும்.

23.பேரறிவாளனுக்கு பரோல்

24.தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டது!

25. கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி மற்றும் அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி – விடுதிச் செலவை அரசே ஏற்கும்.

26. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள் 17 பேர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி

27.எல்லையில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது !

28.அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 2457 ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகை 497.32 கோடி கொடுக்கப்பட்டது!

29.கோயில்களின் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் போன்றோருக்கு நிவாரண உதவித்தொகை ரூ.4000 வழங்கப்பட்டது!

30.நீட் தேர்வு ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது!

31.மின்துறை சீர்செய்யப்பட கணிணி வசதியுடன் – நுகர்வோர் சேவை மையம் தொடக்கம்!

32.தற்காலிக பணியாளர்களாக இருந்த 1220 செவிலியர்களுக்கு பணி நியமனம்!

33.கோவில்களில் தமிழில் அர்ச்சனை!

34.அறநிலைய துறை சார்பில் அனைத்து கோவில் சொத்து விவரம்

இணையத்தில் பதிந்தது!

35.கோவில் சொத்துக்கள் மீட்பு பணி!

36.இந்திய அளவில் 27% ஓபிசி இடஒதுக்கீடு சட்ட போராட்ட வெற்றி!

37.தமிழகத்தில் 10.5% MBC வன்னியர் இடஒதுக்கீடு அரசாணை!

38.தமிழ்நாட்டில் 2000 கோடியில் DEFENSE CORRIDOR முதலீடு!

39.கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள்!

40.சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் படத்திறப்பு

41.தமிழ்நாட்டு வேலையில் தமிழ் இளைஞர்களுக்கு 75% முன்னுரிமை!

42.உலக பொருளாதார அறிஞர்கள் 5 பேரை கொண்ட ஒரு குழு:

43.விஷன் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டத்தின் படி 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் செயல் திட்டம்!

44.முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ் நாடு என்ற செயல் திட்டத்தில் 47 தொழில் திட்டங்கள் ரூ.28,664 கோடி முதலீடுகள்

45.உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் இது வரை 1 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள்!

46.திண்டிவனம்-செய்யார் போன்ற ஊர்களில் தொழிற்சாலை அமைக்கும் செயல் திட்டம்!

47.எண்ணெய் எடுக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் தமிழகத்தில் இடமில்லை என்ற அறிவிப்பு!

48.ஏழு தமிழர் விடுதலைக்காக சட்ட முயற்சிகள்!

49.”நீட்” ஆய்வு குழுவுக்கு சட்டப்போராட்டம்!

50.மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்!

51.பாட புத்தகத்தில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதி பெயர்கள் நீக்கம்!

52.விவசாயத்திற்கு முதன் முறையாக தனி பட்ஜெட் அறிவிப்பு!

53.கல்வித்துறையில் நிரப்பப்படாமல் இருந்த ஆசிரியர் பணிநியமனங்கள்!

54.புதிதாக 120 உழவர் சந்தை அமைக்கும் திட்டம்!

55.பெண்காவலர்கள் பாதுகாப்பு/பந்தோபஸ்து பணிகளில் இருந்து விலக்கு!

56.அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் கல்லூரி கட்டும் செயல்திட்டம்!

57.கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட நிதி சீர்கேட்டை விளக்க 120 பக்க வெள்ளை அறிக்கை!

58.தொழிற்கல்வி படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு !

59.முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அறிவிப்பு!

60.ஆக்சிசன் உற்பத்திக்காக துவங்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடல்!

61.58000 அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்படும்!

62. ஐ டி ஐ மாணவர்களுக்கு சென்னை மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!

63.பயிற்சி மருத்துவர்,முதுகலை மேற்படிப்பு மருத்துவர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி அரசாணை!

64.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு இந்தாண்டு விவசாயம், பொது என 2 நிதிநிலை அறிக்கைகள்!

65.காவலர்களுக்கு வார விடுப்பு எடுக்கும் உரிமை!

66.நிலுவையில் இருந்த அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து!

67.டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருக்கு மணிமண்டபம் கட்டப்படும்!

68.முதியோர் இல்லங்கள் சிறப்பாக இயங்குவதற்கு தனி குழு அமைக்கப்பட்டது!

69.குழந்தை திருமணம் தடுப்பு

கண்காணிக்க குழு!

70.பணிபுரியும் மகளீர்க்கு – விடுதி வசதி அமைக்க நடவடிக்கை!

71. 210 பெட்டிகளுடன் 70 தானியங்கி மெட்ரோ ரயிலுக்காக ஒப்பந்தம்!

72.சென்னை விமானநிலையத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை!

73.தழும்பில்லா அறுவை சிகிச்சை மைய திட்டம்!

74.ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழை நீர் வடிகால் திட்டம்!

75.ரிப்பன் மாளிகை,தலைமை செயலகத்தில்-தமிழ்வாழ்க பலகைகள்!

76.நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ரேஷன் கார்டுகள் மீண்டும் தொடக்கம்!

77.கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும்!

78.அன்பளிப்பாக வந்த 2 லட்சம் நூல்களை -நூலகங்களுக்கு அளிப்பு!

79.அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை!

80.சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவாளர்கள் சமதளத்தில் அமர்ந்து மக்களுக்கு சேவை செய்ய உத்தரவு

81.சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்க அனுமதி!

82. திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 78 ஈழத் தமிழர்கள் விடுதலை!

83.அரசு ஊழியர்கள் வாரம் 2 நாட்கள் கைத்தறி ஆடைகளை அணிய அரசு அறிவுறுத்தல்!

84.பேருந்துகளில் மீண்டும் திருக்குறள்!

85.காலணி தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் நிர்ணயம்!

86.உழவர் நலனுக்கு எதிரான விவசாய சட்டம் , சிறுபான்மையினரை அச்சுறுத்தும் CAA சட்டம் ஆகியவற்றை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே கழக அரசின் உறுதியான நிலைப்பாடு. அதனை வலியுறுத்தி எதிர்வரும் நிதிநிலைக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

87.முதன்முறையாக தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் பெண் ஆட்சியர்கள்

88.அர்ச்சகர்களாக விரும்பும் மகளிர்க்கு பயிற்சி அளிக்க அரசு ஆவண செய்யும்!

89.அரசு ஊழியர்கள் பணியிடை மாறுதல்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க ஆணை!

90.கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி அரசாணை வெளியிடப்படும்!

91.அரசு பணியில் வடமாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமதி இல்லை!

92.காவேரி ஆற்றை தூர்வாரும் பணிகளை ஆய்வு/கண்காணிக்க 4 ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமனம்!

93.கொரோனா நிவாரண நிதி விவரங்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம்!

94.காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி செய்ய நடவடிக்கை!

95.தமிழ்நாடு பாடத்திட்டத்தின் அறிவுரைக்குழு உறுப்பினராக பேரா.சுபவீ

96.பத்திரிக்கையாளர்கள் மீது கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ்!

97.ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்றுள்ள இரு மாணவிகளுக்கு அரசு வேலை!

98.வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி வாரியம்

99.கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து வள்ளுவர் சிலைக்கு பாலம் அமைக்க முடிவு!

100.இந்தியாவின் சிறந்த 10 முதல்வர்கள் பட்டியலில் 68% த்துடன் முதல்வர் ஸ்டாலின் முதலிடம்!

இப்படி 7.6.2021 அன்று தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டின் மீது – தமிழ் மக்கள் அவர்களின் நலனே தனது நலன் என்று உறுதி ஏற்று திறம்பட செயல்பட்டு வருகிறார்.

முதல்வராகப் பொறுபேற்ற இந்த 100நாளில் ஒவ்வொரு வினாடியும் மக்கள் நலனுக்காவே தன்னை அர்ப்பணித்து பணியாற்றி வருகிறார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மு.க.ஸ்டாலின் அவர்களை குறிப்பிடும் போது ‘உழைப்பு… உழைப்பு… உழைப்பு…’ என்றார். அன்று கலைஞர் அவர்கள் ஒரு தீர்க்கதர்சியாகக் கூறினார். அதனை தனது உழைப்பின் மூலம் மெய்பித்துக் கொண்டிருக்கிறார் மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது உழைப்பின் மூலம்! என்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் EXMLA அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாளையவரலாறு

-ஹனீப் கோவை.

Comments