பெரம்பலூரில் 144 தடை உத்தரவு மாவட்ட ஆட்சியர் அதிரடி!!!

    -MMH

     பெரம்பலூர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் செயல்படும் பகுதிகளில்  ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் 3வது அலை வராமல் தடுப்பதற்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 144-ன் கீழ் நாளை ஆகஸ்ட் 4, காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 10 , மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர், லப்பைகுடிகாடு ஆகிய பேரூராட்சிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். மருந்தகங்கள், காய்கறி , பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மட்டும் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

இது தவிர பிற விற்பனை நிலையங்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி.

-N.V.கண்ணபிரான்.

Comments