காலத்தாமதமாகும் வேளச்சேரி 2 அடுக்கு மேம்பால திட்டம்?

   -MMH

  சென்னை: வேளச்சேரியின் விஜயநகர் பேருந்து நிலையத்தில் இருந்து, தாம்பரம், பொன்மார், கேளம்பாக்கம், மேடவாக்கம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளிக்கரணை முதல் கைவேலி வரை, வாகனங்கள் தங்கு தடையின்றி சென்று வருகின்றன. 

ஆனால் வேளச்சேரி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து, விஜயநகர் வரை, காலை மாலை நேரங்களில், கடும் நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசல், புறவழி சாலையில், வேளச்சேரி ஏரியில் இருந்து, விஜயநகர் சந்திப்பு வரை, வாகன தேக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதற்கு தீர்வு காணும் வகையில், விஜயநகர் சந்திப்பில், மேம்பாலம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கபட்டன இதனையடுத்து 

வேளச்சேரி, விஜயநகர் பேருந்து நிலைய பகுதியில், இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என, முதல்வராக இருந்த  ஜெயலலிதா அறிவித்தார். 

உத்தேச மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. பாலம் அமைப்பதற்கு தேவையான கையகப்படுத்தவுள்ள நிலங்களும் அடையாளம் காணப்பட்டு கையகபடுத்தியும் ,ஒரு அடுக்கு, வேளச்சேரி புறவழி சாலையில் துவங்கி, தாம்பரம் -- வேளச்சேரி சாலையின் இருபுறமும் இறங்கும். 

இரண்டாம் அடுக்கு, விஜய நகர் - -தரமணி சாலையில் துவங்கி, வேளச்சேரி ரயில் நிலைய பாலத்தின் முன் முடியும் வகையில் பணிகள் துவங்கபட்டன 

முதல்வராக ஜெயலலிதா இறந்து ஓபிஎஸ்,  இபிஎஸ் என உட்கட்சி களேபரத்தால் ஆட்சியாளர்களும் மாறினர், அதனையடுத்து ஸ்டாலினும் ஆட்சிமாற்றத்தால் முதல்வராகியுள்ளார், ஆனால் பாலத்தின் பணிகள் மட்டும் இன்னும் பாதி முடிவடையாமல் மக்களை சிரமத்திற்குள்ளாக்கி வருகின்றது .

முதல்வர் ஸ்டாலின் துரிதமாக நடவடிக்கை எடுப்பாரா???.

-நவாஸ், புதுப்பேட்டை.

Comments