சிங்கம்புணரியில் மறைந்த முன்னாள் அமைச்சர் மாதவன் 89வது பிறந்த நாள் நிகழ்வு! அமைச்சர் பெரியகருப்பன் மலர்தூவி மரியாதை!

 

-MMH

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர் முன்னாள் அமைச்சர் மாதவன். 1967இல் திருப்பத்தூர் தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிட்டு, பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் அமையப்பெற்ற திமுகவின் முதல் அமைச்சரவையிலேயே இடம்பெற்ற பெருமைக்குரியவர் முன்னாள் அமைச்சர் மாதவன்.

அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்தி, சிங்கம்புணரியை ஒரு முன்மாதிரி நகரமாக உருவாக வித்திட்டவர்.

அவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதியன்று முடிவெய்திய நிலையில், இன்று அவரது 89 ஆவது பிறந்த நாள் நிகழ்வு கொண்டாடப்பட்டது. சுந்தரம்நகர் எதிரில் உள்ள முன்னாள் அமைச்சர் மாதவன் வீட்டிற்குச் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மலர்தூவி மரியாதை செய்தார்.

இந்நிகழ்வில், திமுக ஒன்றியச் செயலாளர் பூமிநாதன், மாநில சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப்பாளர் பூரண சங்கீதா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து மற்றும் சோமசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கணேசன், ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், நகர பொருளாளர் கதிர்வேல், நகர அவைத்தலைவர் காந்திமதி சிவக்குமார், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் இந்தியன் செந்தில், 

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோகரன், சி.பூமிநாதன், குடோன் மணி, நகர இளைஞரணி அருண் பிரசாத், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், ஐ.டி.சையது, காந்திமதி ஆனந்த், குமரிபட்டி கணபதி, தருண் புகழேந்தி, அலாவுதீன் யாகூப், வையாபுரி சரவணன் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

-அப்துல்சலாம்.

Comments