பொள்ளாச்சியில் இயங்கி வரும் நவீன அரிசி ஆலையை வேறு இடத்துக்கு மாற்ற வணிகர்சங்கம் கோரிக்கை !!

 

-MMH

   கோவை மாவட்டம் பொள்ளாச்சி 34 வது வார்டில்  மாடன் ரைஸ் மில் என்ற பெயரில் அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது இந்த ஆலையிலிருந்து தவிடு, உமி, செல் பூச்சி உள்ளிட்டவை காற்றில் வெளியேறி பொதுமக்களுக்கு இடையூறாகவும்  சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியும் வந்தது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் 2019ஆம் ஆண்டு ஆலை புதுப்பிக்கும் போது ஆலையிலிருந்து கழிவுகள் வெளியேறாத வண்ணம் ஆலை அமைப்பு மாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி கொடுத்து இருந்தனர்.

ஆனால் தற்பொழுது ஆலையிலிருந்து வெளிவரும் உமி தவிடு உள்ளிட்ட கழிவுகளை வளாகத்துக்குள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. திறந்த வெளியில் காற்றில் பறக்கவிட்டு கொட்டப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொந்தரவும் சுகாதார சீர்கேடும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட  அதிகாரிகளின் வாக்குறுதி காற்றோடு காற்றாக போய்விட்டதாக இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று பொள்ளாச்சி நகர வணிகர் சங்கம் சார்பாக பொள்ளாச்சியில் இயங்கி வரும் நவீன அரிசி ஆலையினால் ( Modern Rice Mill ) ஏற்படும் மாசு காரணமாக பொதுமக்கள் நலன் கருதி வேறு இடத்துக்கு மாற்ற கோரி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் நகர செயலாளர் அ.ராஜா, ஜெமீஷா நகர துணைச் செயலாளர் அப்துல் காதர், நகர வணிகர் சங்க செயலாளர் அபுபக்கர் சித்திக், நகர வணிகர் சங்க துணை செயலாளர் முகமது ரஃபிக் கலந்துகொண்டனர்.

-M.சுரேஷ்குமார், தமிழக துணை தலைமை நிருபர். 


Comments