கோவாக்சின் போட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஐ.சி.எம்.ஆர் ஆய்வு முடிவு!

 

-MMH

     இந்தியாவில் இரண்டாம் அலை ஏற்படக் காரணமாக இருந்த டெல்டா வகை கரோனா டெல்டா பிளஸ் ஆக மரபணு மாற்றமடைந்து பரவி வருகிறது. அதிகரித்த பரவல் தன்மை, நுரையீரல் உயிரணு ஏற்பிகளுடன் வலுவான பிணைப்பு, மோனோக்ளோனல் ஆன்டிபாடியின் செயல்திறன் குறைவது ஆகியவற்றை டெல்டா ப்ளஸ் கரோனாவின் தன்மையாக மத்திய அரசு கூறியுள்ளது. இதுவரை நாட்டில் 70 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த டெல்டா பிளஸ் புதிய மாறுபாடு என்பதால், அதற்கு எதிராக தற்போது பயன்பாட்டிலுள்ள தடுப்பூசிகள் செயல்படுமா என்ற கேள்வி நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), தங்களது ஆய்வு ஒன்றில் கோவாக்சின் தடுப்பூசி, டெல்டா பிளஸ் வைரசுக்கு எதிராகச் செயல்படுவது தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி கரோனாவிற்கெதிராக 77.8 சதவீத செயல்திறனைக் கொண்டிருப்பது மூன்றாம் கட்ட ஆய்வு முடிவில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது

-சோலை. ஜெய்க்குமார்/Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments