இரண்டரை மணி நேரம் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதங்க நகை கடை உரிமையாளர்கள் சங்கத்தினர்!!

  -MMH
பொள்ளாச்சி தங்க நகை கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று இரண்டரை மணி நேரம் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய தர நிர்ணய ஆணையம் வாயிலாக விற்கப்படும் தங்க நகைகளுக்கு  இனி புதிய ஹால்மார்க் தர அடையாள எண் கொண்ட நிரந்தர முத்திரை பெறுவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று நகைக்கடை உரிமையாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி தங்க நகை கடை உரிமையாளர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9:00 முதல் 11:30 மணி வரை கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகை கடை உரிமையாளர்கள் சங்க பொருளாளர் விஸ்வநாதன் கூறுகையில், "பொள்ளாச்சி பகுதியில் 200க்கும் மேற்பட்ட நகை கடைகள் உள்ளது. மத்திய அரசு நகைகளுக்கு தரச்சான்றிதழ் கொடுக்கும் முறையை வரவேற்கிறோம். அதேசமயம் புதிய ஹால்மார்க் நிரந்தர முத்திரை கட்டாயம் என்பதை வன்மையாக  எதிர்க்கிறோம்.

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் தங்க நகைகள் தேங்கி விற்பனை பாதிப்பு ஏற்படும். மேலும்  தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் நிலை உருவாகும். எனவே இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

-M.சுரேஷ்குமார், தமிழக 

துணை தலைமை நிருபர்.

Comments