இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்ரஸத்துர் ரஹ்மான் பள்ளிவாசலில் வைத்து இரத்த தான முகாம்!!

   -MMH

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆழ்வார் திருநகரி கிளை மற்றும் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்த தான முகாம்.

75 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆழ்வார்திருநகரியில் மத்ரஸத்துர் ரஹ்மான் பள்ளிவாசலில் வைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆழ்வார்திருநகரி கிளை மற்றும் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த தான முகாம்.

TNTJ தூத்துக்குடி மாவட்ட செயலாளர் A. அசாருதீன் தலைமையில், ஆழ்வார் திருநகரி கிளை நிர்வாகிகள் நவாஸ், ரியாஸ், இப்ராஹீம் மற்றும் அப்துஸ்ஸமத் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஶ்ரீவைகுண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. G. வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் TNTJ  தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மத்ரஸத்துர் ரஹ்மான் பள்ளி நிர்வாகிகள் அப்துல் ஹமீத், அக்தார் அய்யூப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை TNTJ தூத்துக்குடி மாவட்ட மருத்துவரணி செயலாளர் ரஷீத் காமில் அவர்கள் தலைமையில் கிளை நிர்வாகிகளும், தொண்டரணியினரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியிலன் துவக்கமாக சகோ  மஹபூப் சுபுஹானி அவர்கள் "பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து அரசு பொது நல மருத்துவர் சாந்தி அவர்கள் இரத்த தானத்தின் முக்கியத்துவத்தையும், தவ்ஹீத் ஜமாஅத் பேரிடர் காலத்தில் ஆற்றும் இரத்த தான சேவையின் தேவை குறித்தும் விளக்கினார்கள்.

நிகழ்ச்சியில் சுமார் 56 நபர்கள் கலந்து கொண்டனர், அதில்  45 ஆண்களும் 5 பெண்களும் தங்களுடைய ரத்தத்தை தானமாக செய்தனர். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும், இரத்ததானம் செய்த சகோதர, சகோதரிகளுக்கும் கிளை சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அன்சாரி, நெல்லை.


Comments