பொள்ளாச்சி பாலியல் வழக்கு- சிக்கப்போவது யார்..?

  -MMH

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது, கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., கோவை மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்தது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், பொள்ளாச்சி போலீசில் புகார் செய்தார். பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் என ஐந்து பேர், 2019ம் ஆண்டு பிப்.,ல் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. கோவை மகளிர் கோர்ட்டில் அவர்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் சி.பி.ஐ., கடந்த, 2019ம் ஆண்டு மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய ஹேரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34), அருண்குமார் (29 )ஆகிய நான்கு பேரை சி.பி.ஐ., கைது செய்தது. இந்நிலையில், வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கில் மேலும், நான்கு பேர் கைது செய்யப்பட்டதால், சி.பி.ஐ., போலீசார் அவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தயார் செய்து நேற்று கோவை மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments