சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்! - சீரமைப்பது வருவாய்த்துறையா ? பொதுப்பணித் துறையா? போட்டியால் மக்கள் அவதி.

    -MMH

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் மேல்கொடி பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதிக்கு  செல்லும் சாலை பக்கத்தில் ஏரி கால்வாய் மூடப்பட்டதால் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தண்ணீர் தேங்கி  நிற்பதால் அப்பகுதி மக்கள் மழை நீரில் செல்லும் அவலம்.

சீரமைப்பது வருவாய்த்துறையா ? பொதுப்பணித் துறையா? என்ற போட்டியால் சீர் அமைக்கப்படாமல் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம்  சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் நிரந்தரமாக கால்வாயில் செல்ல நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

-P.ரமேஷ், வேலூர்.

Comments