சிங்கம்புணரியில், மறைந்த எழுத்தாளர் சந்திரகாந்தனுக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி!

 

-MMH

             சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், தொடரும் குழுவினர் மற்றும் இலக்கிய அன்பர்கள் சார்பில் சிவபுரிபட்டி வாசவி வித்யாலயாவில் மறைந்த எழுத்தாளர் சந்திரகாந்தனுக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

சந்திரகாந்தன் எளிய குடும்பத்தில் பிறந்து, வங்கியில் பணியாற்றிக்கொண்டே தமிழ் இலக்கியப் படைப்புகளையும் சிறுகதை நாவல் கட்டுரைகளையும் படைத்தவர். மனித நேய சிந்தனையாளர். புகழஞ்சலி நிகழ்ச்சியில் சிவகங்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் எழுத்தாளர் சந்திரகாந்தன் அவர்களது திருஉருவப்படத்தை திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம.அருணகிரி, புலவர் பாண்டியன், முனைவர் பழ.முத்தப்பன் அழகப்பன், தேவகோட்டை பழனி ராகுலதாசன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் மன்னை காமராசு, மதுரை லியோ ஜோசப், திருப்புத்தூர் ஜெயச்சந்திரன், தேவகோட்டை மணிமேகலை, கிருங்காக்கோட்டை கீதா மற்றும் சிங்கம்புணரியை சார்ந்த குளோபல் ராஜமூர்த்தி, ஆசிரியர்கள் முத்துப்பாண்டியன் மற்றும் சேவுகமூர்த்தி, ஆவுடையார்கோவில் குணா, அறந்தாங்கி அஜய்குமார், சிவகங்கை தமிழ்க்கனல் மூட்டாம்பட்டி ராசு உள்ளிட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்டு தோழர் சந்திரகாந்தன் குறித்த நினைவுகளை பரிமாறிக் கொண்டனர். 

இந்நிகழ்வில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற உறுப்பினர்கள், தொடரும் குழுவினரை சார்ந்த அன்பர்கள் மற்றும் இலக்கிய ரசனை கொண்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவர் சரவணன், வாசவி வித்யாலயா ராஜ்குமார், ஜெய்ஹிந்த் பாலா, ரகுபதி, பிரவின், ஊடக நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சிங்கை மந்திரி, முனைவர் சேது, கவிஞர் பழ.வள்ளியின் செல்வன், கவிஞர் சீதாராமன் போன்றோர்கள் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. திருமாறன் அவர்களும், தோழர் சந்திரகாந்தனின் மகன் அரவிந்தனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி செலுத்தினர். இவ்விழாவை கண்ணன், மு.பழனியப்பன் மற்றும் சொ.சேதுபதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments