பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிகளை செய்யும் துப்புரவு தொழிலாளர்கள் ..!! தன்னலமற்ற நாட்டின் கண்களாக விழங்கும் இவர்கள் மீது அக்கறை காட்டுமா கோவை மாநகராட்சி நிர்வாகம்.!

-MMH

      கோவை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ளாமல் தங்கள்  பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில்  மக்கள் தொகை அதிகரிக்கும் மாவட்டங்களின் பட்டியலில்  கோவை மாநகரும் ஒன்று. காலை 6 மணி முதலே மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து என்று  பரபரப்பாக காணப்படும்  கோவை மாநகரில் அரசுத்துறைகளில் அதிகாலையிலேயே தங்கள் பணிகளை தொடங்கும் துறைகளில்  முதன்மையாக  விளங்குவது  மாநகராட்சியின்  துப்புரவு  பணிகள்.

இது பணி என்று சொல்வதைவிட ஒரு சேவை என்றே  சொல்லலாம். சுத்தம் இல்லையெனில் சுகாதாரத்தை பேணி காப்பது மிகவும் கடுமையான ஒன்று, நோய் தொற்றுக்கள்  மற்றும் பல உடல் உபாதைகள் உருவாவதற்கு அது காரணமாகிவிடுகிறது. ஆகவேதான் இந்த பணிகளை செய்யும் தொழிலாளர்கள்  மரியாதைக்கும் பாராட்டுக்களுக்கும் உறித்தவர்கள். இது போன்ற உன்னதமான  மக்களை காக்கும் பணியில் இருக்கும் துப்புரவு தொழிலாளர்கள் தங்களை பற்றி கவலை பட்டுக் கொள்ளாமல் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் ( முகக் கவசம், கிளவுஸ்) இன்றி தங்கள் பணிகளை  செய்வது மிகவும் ஆபத்தானது. 

அதுவும் இதுபோன்ற கொரோன காலங்களில் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்  அபாயம் உள்ளது. நாட்டின் கண்களாக விளங்கும் இவர்களை அரசு பேணிப் பாதுகாக்க வேண்டும்  ஆகவே உடனடியாக  கோவை மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தை மிகுந்த கவனத்தில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தக்க  பாதுகாப்பு உபகரணங்களை  வழங்க வேண்டும் என்றும், ஏற்கனவே வழங்கி இருப்பின் அதைப் பயன்படுத்த தக்க அறிவுரை செய்யவேண்டும். இதுவே மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும்  உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக

-முகமது சாதிக் அலி.

Comments