வால்பாறை பகுதிகளில் பகல் நேரங்களில் சிறுத்தை புளி நடமாட்டம்..!!

 

-MMH 

         கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் தேயிலைத் தோட்ட காடுகளில் உலாவரும் சிறுத்தை. வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் தேயிலைத் தோட்ட புதர்களில் ஒளிந்திருக்கும் சிறுத்தை.

காமராஜ் நகர் பகுதிகளில் கோழி நாய் பூனை ஆகிய வீட்டு விலங்குகளைகுறி வைத்துத் தாக்கும் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது பலமுறை வனத்துறையினரிடம்  அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் அப்பகுதியில் குண்டுகளை வைத்து பிடிப்போம்  என்று கூறி விட்டு சென்றார்கள்,

அதற்கு பின்பு இதுவரை வனவிலங்கு அதிகாரிகள் வரவில்லை என்று கூறும் மக்கள் இப்பகுதிகளில் கூண்டு வைத்து சிறுத்தை புளியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

-திவ்யகுமார்.

Comments