அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை !!

 

-MMH

     முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக வேலுமணி இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அரசு ஒப்பந்தப்புள்ளி பணிகளை தருவதாகக் கூறி 1.25 கோடி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது பாதிக்கப்பட்ட கான்டிராக்டர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கோடம்பாக்கத்தில் வேலுமணிக்கு நெருக்கமான நபர் ஒருவருக்கு வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

முன்னதாக அதிமுக ஆட்சியின் போதே அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் அளித்தார். அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

-Ln இந்திரதேவி முருகேசன் / சோலை ஜெயக்குமார்.

Comments