ஏழு வருடமாக கட்டப்படாத மேம்பாலம்!! நடவடிக்கை எடுக்குமா அரசு?!

 -MMH

கோவை ஹோப் காலேஜ் ரயில்வே தண்டவாளத்தில் க்குமேல் மேம்பாலம் கட்டும் திட்டம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் அங்கீகரிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது இருப்பினும் மேம்பால பணி ஆரம்பிக்க மலேயே இருந்து. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பின் அடித்தளமிட்டு பாலம் கட்டும் பணி தொடங்கியது சிறிது காலம் அந்த பணி தொய்வில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென்று பாதியிலேயே இந்த கட்டுமானப் பணியை கைவிடப்பட்டு  தற்போது எந்த முன்னேற்றமும் இல்லாமல்  அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

 கடந்த அதிமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்கள் பலர், பொதுமக்களும் பலதடவை மனுக்களும் அளித்தும் போராட்டங்கள் நடத்தியும் பாலம் கட்டுமானப் பணி முடிவடைய வேண்டும் என்ற  கோரிக்கை வைத்தனர். 

கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவைச் சேர்ந்த சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ நா. கார்த்திக் அவர்கள் தலைமையிலும் போராட்டங்கள் நடந்தன. இதன்விளைவாக அதிகாரிகள் மேம்பால பணியை பார்வையிட்டு அவை விரைவில் இப் பணியய்முடித்து தருவோம் என உறுதி கூறியதாக தெரிகிறது. 2006 திமுக ஆட்சியின் போது  இத்திட்டம் அடிக்கல் நாட்டப்பட்ட தாகமும்  அதனாலேயே அதிமுக ஆட்சியில் இப்பால பணி நடைபெறாமல் புறக்கணிக்கப்பட்ட வருவதாகவும்  பலர் புகார் கூறுகின்றனர். 

தற்போது திமுக ஆட்சியில் உள்ள நிலையில் மேம்பால  வேலையை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர் இதை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு பணியை துரிதமாக முடிக்க வேண்டும் என்பது பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

நாளைய வரலாறு செய்திக்காக,

-முகமது சாதிக் அலி.

Comments