கோவையில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு !!

-MMH 

          தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 2,3 தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 9 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதேபோல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் அருகே தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் தீவிர காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. 

அதோடு வங்க கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்வது பாதுகாப்பானது கிடையாது என்று வானிலை மையம் கூறியுள்ளது.டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புண் உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் ஒரு சில பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை, சென்னையில் மாலைக்கு பின் வானம் மேக மூட்டதோடு காணப்படும்.

-G.முகிலன்,கோவை. 


Comments