வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்தத விவகாரம் - உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்.

    -MMH

    வேலூர்:வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்தத விவகாரம்-உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம். 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்ததாக வீடியோ வெளியான நிலையில், போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியாத்தம்-சித்தூர் நெடுஞ்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சரவணன் என்பவர் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியானது. இதையடுத்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் சரவணணை, ஆயுதப்படைக்கு மாற்றி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். 

- P.ரமேஷ். வேலூர்.

Comments