பொள்ளாச்சி கோவை மின் இரயில் பாதை பணிகள் நிறைவு!!

-MMH

பொள்ளாச்சி - கோவை இடையே மின்ரயில் போக்குவரத்து துவங்குவது எப்போது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி - போத்தனுார் (40 கி.மீ.,) வழித்தடத்தை மின்மயமாக்கும் பணி இரண்டாண்டுகளாக நடந்தது. பணிகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இதனை, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி, விரைவில் மின்ரயில் போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பொள்ளாச்சி - கோவை இடையே தற்போது ஒரு ரயில் கூட இயங்காத நிலையில், மின்ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டால், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயனடைவர். பயணிகள் எண்ணிக்கையும், வருவாயும் அதிகரிக்கும். எனவே, பணிகள் நிறைவடைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, சோதனை ஓட்டம் நடத்த, தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments