வால்பாறையில் இரவு பகலாக மக்களையும், வன விலங்குகளையும் பாதுகாக்கும் பணியில் வனவிலங்கு காப்பக அதிகாரிகள்..!! பாராட்டி மகிழும் மக்கள்...!!

 

-MMH

              வால்பாறையில் இரவு பகலாக மக்களையும், வன விலங்குகளையும் பாதுகாக்கும் பணியில் ராணுவத்திற்கு ஈடாக இயங்கும் வனவிலங்கு காப்பக அதிகாரிகள்..!! பாராட்டி மகிழும் மக்கள்...!! கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரவு பகலாக அங்கு  வசிக்கும் மக்களையும் , வன  விலங்குகளையும் பாதுகாக்கும் பணியில் தன்னலமற்று சிறப்பாக செயல்படும் வால்பாறை  வனவிலங்கு காப்பக அதிகாரிகள்.

கரடி, சிறுத்தை, யானை போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் இரவு  நேரங்களில், சில சமயங்களில் பகலிலும் கூட அதிகம் உள்ள வால்பாறை பகுதியில், அவ்  வனவிலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்தும், தாக்குதல்களில் இருந்தும் அப்பகுதி மக்களை பாதுகாப்பது மட்டுமின்றி வன விலங்குகளுக்கும் எந்த தீங்கும் ஏற்படாத வகையில் 24 மணி நேரமும் கூப்பிட்ட குரலுக்கு விரைந்து வந்து  மக்களின் உயிரை பாதுகாக்கும்  தன்னலமற்ற சேவையில்  ராணுவத்துக்கு ஈடாக செயல்பட்டு வருகின்றது.  

வால்பாறை வன விலங்கு காப்பகம். இவர்களின் இந்த உன்னத செயல்பாட்டினால் மக்களிடையே சற்று அச்சம் தவிர்ந்த நிலையும், பாதுகாப்பு உணர்வும்  சமீபகாலமாக நிலவி வருகிறது, ஆகவே இதற்கு பொதுமக்கள் வனவிலங்கு அதிகாரிகளை வெகுவாக நன்றியுடன் பாராட்டி வருகின்றனர் அதுமட்டுமின்றி இது தொடர வேண்டும் என்றும் தங்கள் விருப்பங்களை தெரிவித்தன.

நாளைய வரலாறு செய்திக்காக.

 -திவ்ய குமார், வால்பாறை.

Comments