பள்ளி, கல்லூரிகள் திறப்பு!! அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!!

 -MMH

தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தாலும் பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாணவ-மாணவிகள் சுகாதார முறையில் பள்ளிகளில் பயில ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். முதலமைச்சர் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-வ.ருக்மாங்கதன், சென்னை.

Comments