ஆஹா இவ்வளவு வண்ணங்களா... கோவை மக்களை ஆச்சரியப்படுத்திய யமஹா பாசினோ பைக் ராலி..!!

 

-MMH

     கோவை  CAG யமஹா ஷோரூம் சார்பாக பாசினோ ஸ்கூட்டரின்  புதிய வண்ணங்களை  அறிமுகப்படுத்தும் வகையில் 40  ஆண்கள் மற்றும் பெண்கள் பைக் ரைடர்ஸ் மூலம் பைக் நேற்று மதியம் தொடங்கி மாலை வரை ஸ்கூட்டர் ரேலி நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டர் வகைகளில் யமஹா கம்பெனி அறிமுகப்படுத்திய பாசினோ வண்டியும் ஒன்று. இந்த வண்டி அறிமுகப்படுத்திய ஆரம்பத்தில் மூன்று வண்ணங்களில் மட்டுமே வெளிவந்தது. தற்போது இவ் வண்டியின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கத்தில்  யமஹா கம்பெனி 16 வண்ணங்களை  பாசினோ ஸ்கூட்டர் களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை விளம்பர படுத்தும் நோக்கில் கோவை சிஏஜி யமஹா ஷோரூம்  சார்பாக 40 பேர் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பைக் ரைடர்ஸ் மூலம் கணபதி ஏரியா தொடங்கி கோவை நகரை நீல கலர் டீசர்ட் மற்றும் பிளாக் ஜீன்ஸ் யூனிஃபார்ம் அணிந்த இந்த ரைடர்ஸ் சுற்றி வந்தன.

ஒருசேர 40 வண்டிகளும் அணிவகுத்து வந்த காட்சி அழகாகவும்  கண்ட மக்களின் கண்ணைப் பறிக்கும் வகையில் அமைந்தது. ஆஹா இவ்வளவு வண்ணங்களால்  என்று ஆச்சரியப்படும் வகையில் அமைந்தது. பெட்ரோல் விலை உச்சத்தில் உள்ள நிலையில் இதுபோன்ற வியாபார  யுத்திகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சிஏஜி  நிர்வாகம் தெரிவித்தது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முகமது சாதிக் அலி.

Comments