தும்பைப்பட்டியில் வணிக வளாகம் அமைக்க இடத்தை ஆய்வு செய்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்!!

  -MMH

தியாக சீலர் கக்கன் அவர்கள் பிறந்த போற்றுதலுக்குரிய தும்பைப்பட்டி ஊராட்சி, போதிய வருவாயின்றி உள்ளது. எனவே, நிர்வாகத்திற்கு ஏற்படும் சிரமம்  தொடர்பாக விளக்கியும், மகளிர் பொருளாதார மேம்பாடு, 

தொழில் முனைவோர் பயிற்சி கூடம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டு திட்டங்களை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடாக ஒரு வணிக வளாகம் தேவை என்பதை, ஊராட்சி மன்றத் தலைவராக அயூப்கான் (எ) பாட்டையா பொறுப்பேற்றதிலிருந்து அரசின் பல்வேறு மட்டங்களில் கோரிக்கை வைத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று (27/08/2021) நண்பகல் கருங்காலக்குடியில் நடந்து கொண்டிருக்கும் மேம்பால பணிகளை ஆய்வு செய்ய வந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களைச் சந்தித்த தும்பைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அயூப்கான் (எ) பாட்டையா, அவரிடமும் ஊராட்சியின் நிதி ஆதாரத்தை மேம்படுத்த, வருவாயைப் பெருக்க ஆலோசனை செய்தார்.

ஊராட்சித் தலைவரின் தொலைநோக்குத் திட்டம் தொடர்பாக அறிந்த மதுரை மக்களவை உறுப்பினர், நேரடியாக தும்பைப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான  வணிக வளாகம் கட்ட உத்தேசித்துள்ள நிலத்தைப் பார்வையிட்டு, உரிய அதிகாரிகளிடம் பரிந்துரை செய்வதாகக் கூறினார்.

- வெண்புலி, மதுரை.

Comments