சதுப்பு நிலத்தை பாதுகாத்திடுங்கள் !!

-MMH 

      பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது ,  இதனை துரிதுபடுத்திடவேண்டும் என்ற சமுக ஆர்வலர்களின் கோரிக்கைகளும் சேர்த்தே கிடப்பில் உள்ளது.

சென்னை வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரையிலான  பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி உள்ளது. இங்கு  ஆண்டுதோறும் 184 வகை பறவையினங்கள் வந்து செல்கின்றன. தற்போதைய நிலவரப்படி, 1,482 ஏக்கர் பரப்பளவில், 200 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்புகள் உள்ளன.

சதுப்பு நிலத்தை ஒட்டி மிக நெருக்கமாக, 1,200 தனியார் குடியிருப்புகள் உள்ளன. பள்ளிக்கரணை குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது முறையான திட்டமிடுதலின்மை காரணத்தால் , சதுப்பு நிலத்தில் கலந்திடுகின்றது இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பிற்குள்ளாகின்றது . 

இதனை தடுத்திட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அருகில் இருக்கும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கபட்டுவருகின்றது , முறையான திட்டமிடுதல் , செயல்படுத்தல் இல்லாத காரணத்தால் தாமதமாகி மேலும் சதுப்புநிலங்கள் பாதிப்பிற்குள்ளாகின்றது.

ஆகையால் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்  என சூழலியல் பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நவாஸ், சென்னை.

Comments