சேரன் மாநகர் - கடந்த 10 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி.!! ஆனால் இதெல்லாம் சரியா இருந்தா !! கிழக்கு மண்டலத்தின் நம்பர் ஒன்..!!

 

-MMH

      கோவை மாவட்டம் கிழக்கு   மண்டலத்தில் 32 வுது வார்டுக்கு உட்பட்ட, கிட்டத்தட்ட 10,000 க்கு மேல் மக்கள் வசிக்கும் பகுதியாக சேரன் மாநகர் மற்றும்   அதன் சுற்றுப் பகுதியும்  அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அதிக மக்கள் குடியேற்றம், ரியல் எஸ்டேட் தொழில் ஏற்றம், பஞ்சாயத்தில்இருந்து பேரூராட்சி ஆகியது, அதிகமான கல்வி நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள், தலைசிறந்த மருத்துவமனைகள், 

சுற்றியும்  கோயில்கள், பள்ளிவாசல், தேவாலயங்கள்   3 கிலோமீட்டர் தொலைவில் சித்ரா இண்டர்நேஷனல் ஏர்போர்ட்  போன்ற ஏனைய வசதிகளும் சிறப்புகளையும் கொண்டு கவுண்டம்பாளையம் சட்டமன்ற  தொகுதிக்கு  உட்பட்டு  அமைந்ததுதான் சேரன் மாநகரம் அதன் சுற்றுப்பகுதியம். அவிநாசி சாலையில் இருந்து சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டங்களுக்கு செல்பவர்கள் சேரன்மாநகர் விளாங்குறிச்சி  சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.


மேல் கூறப்பட்டது போல் பல சிறப்பம்சங்கள் இருப்பினும், சில முக்கிய அத்தியாவசிய பின்னடைவுகள் காணப்படுகிறது  சாலை வசதிகள் இங்கு மோசமான நிலையிலேயே இருக்கிறது  குண்டும் குழியுமாய், ஜல்லி போடப்பட்டு இன்னும் தார் ஊற்றாத சாலைகள், சாலை ஓர  மின் விளக்குகள் இன்னும் அதிகப்படுத்த வேண்டியுள்ளது, டவுன் பஸ் போக்குவரத்து குறைவு , இதுமட்டுமின்றி  சமீபகாலமாக வீடுகளுக்கு விநியோக படுத்தப்படும்  குடிதண்ணீர் அளவு சற்று குறைக்கப்பட்டுள்ளது  போன்ற பின்னடைவுகள் இன்னும் இங்கு இருக்கத்தான் செய்கிறது.

அப்பகுதி மக்களிடத்தில் இதைப் பற்றிய கருத்துக்களை கேட்டபொழுது சேரன்மாநகர் அதன் சுற்றுப்பகுதியில் குடியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி இது ஒரு சிறந்த ரெசிடென்ட் ஏரியா, அமைதியான சூழல், சுற்றியும் மரங்கள், பொல்யூஷன் பிரீ, பாதுகாப்பு  மூன்று அம்சங்களை அடுக்கிக் கொண்டே போனார்கள் இருப்பினும்  மேற்கூறப்பட்ட பின்னடைவுகள் இருக்கத்தான் செய்கின்றது, இந்த பின்னடைவுகள் அனைத்தையும் குறிப்பிட்ட நிர்வாகங்கள் கருத்தில் கொண்டு மேம்படுத்தினால் கோவை கிழக்கு மண்டல பகுதியில் ஹாட் சிட்டி  என்ற  முத்திரையை பதித்து விடும் என்று தங்கள் ஆசைகளையும் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

 -முஹம்மது சாதிக் அலி.

Comments

Unknown said…
Yes Absolutely Right.
The roads are much damaged