100 வது வாரத்தை கடந்து வெற்றிநடை போடும் ஆனைமலை ஆலம் விழுது!!

   -MMH

    பொள்ளாச்சி ஆனைமலை ஆலம் விழுது அமைப்பின் சார்பாக 104 வது வார களப்பணி ராமநாதன் நகர் பகுதியில் உள்ள பார்க் சைட்டில் இன்று காலை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் ஆலம் விழுது அமைப்பினர் கலந்துகொண்டு அரளி, நந்தியவட்டம்,புங்கன் மரம் உள்ளிட்டவை நடவு செய்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டுவரும் ஆலம் விழுது அமைப்பினரை இப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 100வது வாரத்தை கடந்து சமூகப்பணியில் சேவையாற்றி வரும் ஆலம் விழுது அமைப்பினரை சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பது அந்தக்காலம் மரம் வளர்ப்போம் உயிர் காப்போம் இது இந்தக் காலம் என்கிற சிந்தனையோடு,

தமிழக துணை தலைமை நிருபர், 

-M.சுரேஷ் குமார், பொள்ளாச்சி.

Comments