காசு, பணம், துட்டு மணி மணி..!!உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய 100 மில்லியன் டாலர் சொத்து..!!!

  -MMH

    அம்பானி, இவர் பெயரைக் கேட்டாலே பணம், காசு, துட்டு, மணி மணி என்ற பாடல்தான் நமக்கு ஞாபகம் வரும்.

உலக பணக்காரர் பட்டியலில்  இவருக்கென்று ஒரு தனி இடம் உண்டு இன்று உலக நாட்டையே இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த பிரம்மாண்டமான பயங்கரமான  தொழிலதிபர் இவர் .

நாம் ஒருவரை பார்த்து அவரின் தகுதி தராதரத்தை கிண்டல் செய்வது கூட  ஆமா இவன் பெரிய அம்பானி என்று சொல்லும் அளவுக்கு இவர் புகழ் மக்கள் உங்கள் மனதில்  பதிவாகிவிட்டது .

ரிலையன்ஸ் நிறுவனம் கால் பதிக்காத துறைகளே இல்லை. பெட்ரோல் பங்க் ஆரம்பித்து  மொபைல், இன்டர்நெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், இன்ஷூரன்ஸ், கன்ஸ்டிரக்ஷன் போன்ற முக்கிய துறைகளில் இவர்கள் தான் கிங் மேக்கர்.

தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலையில்  புதிதாக ஆண்ட்ராய்ட் மொபைல் ஒன்றை இந்த செப்டம்பர் மாதத்தில அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அறிவிப்பினால் மற்ற மொபைல் நிறுவனங்கள் கலக்கத்தில் ஆட்டம் கண்டு உள்ளது.

இது ஒருபுறமிருக்க அவருடைய சொத்து மதிப்பு தற்போது நிலவரப்படி 100 மில்லியன் டாலரை நெருங்கியுள்ள தாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உலக மக்களையும் முதலீட்டாளர்களும் தொழில் அதிபர்களையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

 நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா, திருப்பூர்.

Comments