10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் !!
செப்டம்பர் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள சிறைவாசிகள் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்.
இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ எஸ் இஸ்மாயில், மாநில துணைத் தலைவர் காலித் முஹம்மத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் வன்னியரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
- சீனி,போத்தனூர்.
Comments