ஈமூ கோழி மோசடி - ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை !!

 

-MMH

     ஈமூ கோழி மோசடி - ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் 55 லட்சம் அபராதம் - கோவை முதலீட்டார்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2011ம் ஆண்டு இரண்டு இடங்களில்  ஈமூ கோழியில் முதலீடு செய்ய கோரி விளம்பரம் செய்து 40 பேரிடம் 58.51 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த குமார்(49), கார்த்திகேயன் (51). இருவர் மீது கோவை பெருளாதார குற்றப்பிரிவில் 2 வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் குமார், மற்றும் கார்த்திகேயன் இருவரும் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் 55 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி உத்தரவிட்டார்.

- சீனி,போத்தனூர்.

Comments