கோவை அருகே 15 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை!!

      -MMH

கோவை அருகே உள்ள உடையாம்பாளையத்தில் துணிக்கடை உரிமையாளர் வீட்டில் 51 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள். கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பார்க்டவுன் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 42). அருணாச்சலம் கணபதி சத்தி ரோட்டில் துணிக்கடை நடத்தி வருகிறார். கொரோனா பரவல் காரணமாக கோவையில் சனி, ஞாயிற்றுக்கிழமை கடைகளையும் அடைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை கடை மற்றும் வீட்டை பூட்டிவிட்டு அருணாச்சலம் தன் குடும்பத்துடன் வால்பாறை சென்றுள்ளார். 

பின்னர் வீடு திரும்பிய அருணாச்சலம் மற்றும் அவர் குடும்பத்தினர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 51 பவுன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments