கிருங்காக்கோட்டையில் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த தின விழா! தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் நடத்திய திறன் அறியும் போட்டிகள்!

 

-MMH

     சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகிலுள்ள கிருங்காக்கோட்டை கிராமத்தில் தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் சார்பில் வ.உ.சிதம்பரனார் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. 

நேற்று காலை 10 மணி முதல் இரவு வரை நடைபெற்ற விழாவில் சுற்று வட்டார பள்ளிக் குழுந்தைகள் கலந்து கொண்ட கட்டுரைப்போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, வினாடிவினா போட்டி உள்ளிட்ட பல்வேறு திறன் அறியும் போட்டிகள் நடைபெற்றன. மாலையில் போட்டிகளில் வெற்றி பெற்ற 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

விழா நிறைவாக தமிழ் நாட்டுக்கல்வி இயக்க பொறுப்பாளர் செ.கர்ணன் தலைமையில் வ.உ.சிதம்பரனார் குறித்து கதிர்நம்பி எழுதிய சிதம்பர வேங்கை நூல் வெளியிடப்பட்டது. நூலினை பேராசிரியர் கோச்சடை வெளியிட, தமிழக மக்கள் மன்றத் தலைவர் ச.மீ.ராசகுமார் மற்றும் தமிழர் அறம் அமைப்பின் தலைவர் பட்டுக்கோட்டை ராமசாமி இருவரும் பெற்று கொண்டனர்.

நிகழ்வில் பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தை சார்ந்த கம்பூர் செல்வராஜ் மற்றும் தங்க.அடைக்கன், தமிழ்த்தேச மக்கள் கட்சி தமிழ்க்குமரன், இளையவன், பச்சை தமிழகம் கட்சி தமிழ் கார்த்திக், வழக்கறிஞர் ஆதி, தமிழிய சிந்தனைக்களம் இளஞ்சென்னியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-அப்துல்சலாம், ராயல் ஹமீது.

Comments