பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற காரில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா காருடன் பறிமுதல்!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற காரில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா, காருடன் பறிமுதல் செய்தனர் காவல் துறையினர்.
குட்கா ஏற்றி வந்த காரை காவல்துறையினர் பின்தொடர்ந்து வந்தால் நெக்குந்தி சுங்கச்சாவடியில் நிற்காமல் அங்கிருந்த தடுப்புகளை உடைத்துத் கொண்டு காவல்துறையினர் வாகனத்தின் மீது மோதி நின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கடத்தலில் ஈடுபட்ட காட்பாடி கல்புதூர் பகுதியை சேர்ந்த லால, வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த யுவராஜ் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் மேலும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-P. ரமேஷ் வேலூர்.
Comments