சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் மெகா தடுப்பூசி முகாமின் மூலம் 2638 பேருக்கு தடுப்பூசி!

-MMH

                        சுகாதாரத்துறை தகவல் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நிகழ்விற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முகாமை தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, 'கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மட்டுமின்றி, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் அவசியமாகும்.

ஏற்கனவே, சிவகங்கை மாவட்டத்தில் 750 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்து. இதன்மூலம், 18 வயதுக்கு மேற்பட்ட சுமாா் 43 ஆயிரம் போ்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவுகளைப் பின்பற்றி, சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்' என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவத் துறை இணை இயக்குநா் இளங்கோ மகேஸ்வரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் (பொறுப்பு) சிவரஞ்சனி, வட்டார மருத்துவ அலுவலா்கள் செந்தில்குமாா், நபிசாபானு, பூச்சியியல் மருத்துவ அலுவலா் ரமேஷ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

நேற்று மாலை வரை நடைபெற்ற இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் சிங்கம்புணரி ஒன்றியத்தில் 2638 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-அப்துல்சலாம்.

Comments