3 மாதங்கள் இஎம்ஐ கட்ட தேவையில்லை - அதிரடி அறிவிப்பு!!

-MMH

   எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 5 லட்சம் வரை நிபந்தை இல்லா கடன் வழங்கி வருகிறது. கொரோனா துயர் காலத்தில் வங்கிகள் பல , பலவிதமான லோன்களை அறிமுகப்படுத்தின . அந்த வரிசையில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கொரோனா சிகிச்சைக்கான செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ .5 லட்சம் வரை கடன் வாங்கிக் கொள்ளும் கவச் லோன் என்ற பர்சனல் லோனை அறிமுக செய்தது .

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த கடனுக்கு எளிதில் விண்ணப்பிக்கலாம் . இந்த லோனைப் பெற சம்பளதாரர்கள் , சுய தொழில் செய்பவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட அனைத்து நபர்களும் விண்ணப்பிக்கலாம் . ஏற்கெனவே எஸ் . பி . ஐ வங்கியில் தனிநபர் கடன் பெற்றிருப்பவர்களும் , இந்தக் கடன் திட்டத்திற்காக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் தான் . ஓய்வூதியதாரர்களும் இந்த கடன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் .

எஸ்பிஐயில் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த லோன் திட்டத்தில் கடன் பெற வாடிக்கையாளர்கள் சொத்து ஆவணங்களையும் டெபாசிட் செய்ய வேண்டாம் . தனி நபர் அல்லது அவர்களின் குடும்பத்திற்கு இந்த திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை ரூ .5 லட்சம் கடன் வழங்கப்படும் . அதே நேரத்தில் , குறைந்தபட்ச கடன் 25 ஆயிரம் வரை எடுக்கலாம் . இதற்கான வட்டி விகிதமாக எஸ்பிஐ 8.5% என நிர்ணியித்துள்ளது .

இந்த கடனில் வாடிக்கையாளர்கள் இஎம்ஐ - யை நினைத்து கவலை கொள்ளவும் வேண்டாம் . ஏனெனில் கடன் வாங்கி மூன்று மாதங்கள் கடன் காலம் முடிந்த பிறகும் மேலும் மூன்று மாதங்களுக்குகடனுக்கான இஎம்ஐ செலுத்துவதில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது . எஸ்பிஐ யில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களும் இந்த கடனை பெறலாம் .

-Ln இந்திராதேவி முருகேசன், சோலை ஜெய்க்குமார்.

Comments